கடலூரில் நடுரோட்டில் மின்கம்பி அறுந்து கிடந்ததால் பரபரப்பு


கடலூரில் நடுரோட்டில் மின்கம்பி அறுந்து கிடந்ததால் பரபரப்பு
x

கடலூரில் நடுரோட்டில் மின்கம்பி அறுந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் பாஷியம் தெருவில் மின்கம்பி அறுந்து நடுரோட்டில் விழுந்தது. அந்த சமயத்தில் அவ்வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனே மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்யும் பணியில், மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story