கடலூரில் மீனவரிடம் சிப்பி வாங்கி ரூ.1¼ லட்சம் மோசடி போலீசார் விசாரணை
கடலூரில் மீனவரிடம் சிப்பி வாங்கி ரூ.1¼ லட்சம் மோசடி செய்தது தொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூர்
கடலூர் தாழகுடாவை சேர்ந்தவர் அறிவு (வயது 52), மீனவர். இவரிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பச்சையாங்குப்பத்தை சேர்ந்த நரேஷ் (40) என்பவர், ஒரு கிலோ சிப்பியை ரூ.110-க்கு விலை பேசி மொத்தம் 1,223 கிலோ சிப்பி வாங்கினார். பின்னர் நரேஷ், அறிவுக்கு கொடுக்க வேண்டிய ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 530-ல் முதற்கட்டமாக ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். ஆனால் மீதி தொகையை கொடுக்கவில்லை.
இதுதொடர்பாக அறிவு, பலமுறை கேட்டும் நரேஷ் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவு, தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story