கடலூரில் சாராயம் பதுக்கிய பெண் உள்பட 3 பேர் கைது
கடலூரில் சாராயம் பதுக்கிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
கடலூர்
கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் உத்தரவின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார் நேற்று காலை தியாகவல்லி, ஆற்றங்கரை வீதி, பச்சையாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஆற்றங்கரை வீதியை சேர்ந்த அம்பேத்கர் பிரியன் (வயது 30) சாராயம் பதுக்கி வைத்திருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து 120 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக பச்சையாங்குப்பத்தை சேர்ந்த தெய்வானை (55), தியாகவல்லியை சேர்ந்த தர்மமூர்த்தி (31) ஆகியோரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 215 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story