கடலூரில்டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கடலூரில்டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:47 PM GMT)

கடலூரில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம், சட்டப்படியான பணிவிதிகள் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியில் எவ்வித படிகளும் இல்லாமல் பணியாற்றி வரும் நிலையில், அவர்களிடம் தொழில்வரி பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். பிடித்தம் செய்த தொகையை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், மாநில செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அல்லிமுத்து வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் ரமேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் தாகாபிள்ளை, நிர்வாகிகள் ராஜாமணி, சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story