கடலூரில்மாவட்ட அளவிலான கைத்தறி விற்பனை கண்காட்சிஅமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தனர்


கடலூரில்மாவட்ட அளவிலான கைத்தறி விற்பனை கண்காட்சிஅமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:30 AM IST (Updated: 31 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மாவட்ட அளவிலான கைத்தறி விற்பனை கண்காட்சியை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோா் தொடங்கி வைத்தனர்.

கடலூர்

மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம் மற்றும் மாநில அரசின் கைத்தறி துறை இணைந்து மாவட்ட அளவிலான கைத்தறி விற்பனை கண்காட்சி கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தனர்.

இக்கண்காட்சியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்பட்ட பாரம்பரிய பருத்தி மற்றும் பட்டு ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கண்காட்சியானது வருகிற 4-ந் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் அனைத்து கைத்தறி துணி ரகங்களுக்கும் 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மகளிர் திட்ட இயக்குனர் செந்தில் வடிவு மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story