கடலூரில் வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கடலூரில்  வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை  மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ.6 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

கடலூர் கோண்டூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்தவர் சீதாராமன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 60). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சீதாராமன், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். இந்த நிலையில் பெரியசெவலையில் வசித்து வந்த 3-வது மருமகன் உடல்நிலை பாதிப்பால் இறந்து விட்டதால், கடந்த 18-ந் தேதி சீதாராமன், ஜெயலட்சுமி ஆகியோர் பெரியசெவலை சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் ஜன்னல் உடைந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 19 பவுன் நகைகளை காணவில்லை.

வலைவீச்சு

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜன்னலை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story