சைக்கிள் ஓட்டும் போட்டியில் கூடலூர் மாணவர்கள் சாம்பியன்


சைக்கிள் ஓட்டும் போட்டியில் கூடலூர் மாணவர்கள் சாம்பியன்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:15:56+05:30)

சைக்கிள் ஓட்டும் போட்டியில் கூடலூர் மாணவர்கள் சாம்பியன்

நீலகிரி

கூடலூர்

தமிழ்நாடு அரசால் பல்வேறு வயதுப் பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட மாணவர்களுக்கு இடையிலான அண்ணா நினைவு மிதிவண்டி ஓட்டும் போட்டி கூடலூரில் நடைபெற்றது.

இதில் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கலந்து கொண்ட மாணவர்களில் இளையோர் பிரிவில் (பெண்கள்) எஸ். தனுஷிரி முதலிடமும், இளையோர் பிரிவில் (ஆண்கள்) எஸ். ரிஷிதரன் 2-ம் இடத்தையும் பிடித்தனர். ஆறுதல் பரிசு பெற்ற ரேணுகா தேவி, பிரவீன் உள்ளிட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் அய்யப்பன் மற்றும் உடற்கல்வி ஆசிரியை சாஜிதா ஆகியோர் உள்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story