தேவிபட்டினம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 2 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணிகள் தீவிரம்


தேவிபட்டினம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 2 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 21 Oct 2023 1:00 AM IST (Updated: 21 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

தேவிபட்டினம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 2 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம்

பனைக்குளம்

ராமநாதபுரம் மாவட்டம் வழிபாட்டு தலம் அதிகம் உள்ள தேவிபட்டினம் பகுதிக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் தேவிபட்டினம் ஊராட்சி பகுதி மக்களின் நலன் கருதி ஊராட்சி மன்ற தலைவர் ஹமிதியாராணி ஜாகிர் உசேன் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக புதிதாக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தேவிபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட வெட்டு ஊரணி என்ற இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.6 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல் பூவோடு என்ற இடத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.8 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பில் கட்டப்படுகிறது. முனியப்பன் ஊரணி அருகே பெரிய குடிநீர் கிணறு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.


Next Story