கொடுமுடி அருகே நடந்த வெவ்வேறு சம்பவங்களில்வீடு- கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த அரசு பஸ்கள்


கொடுமுடி அருகே நடந்த வெவ்வேறு சம்பவங்களில்வீடு- கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த அரசு பஸ்கள்
x

கொடுமுடியில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் வீடு மற்றும் தோட்டத்துக்குள் அரசு பஸ்கள் புகுந்தன. இந்த விபத்துகளில் 2 பஸ்களில் பயணம் செய்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

ஈரோடு

ஊஞ்சலூர்

கொடுமுடியில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் வீடு மற்றும் தோட்டத்துக்குள் அரசு பஸ்கள் புகுந்தன. இந்த விபத்துகளில் 2 பஸ்களில் பயணம் செய்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

வீட்டுக்குள் புகுந்தது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. பஸ்சை சண்முகசுந்தரம் ஓட்டி வந்தார். ராஜன் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 25 பயணிகள் இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு கொடுமுடியை அடுத்த ரோஜா நகர் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்பி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்து வீட்டுக்குள் புகுந்தது. இதில் வீட்டின் முன்புறம் போடப்பட்டு இருந்த தகரத்தினாலான கொட்டகை சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 25 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பஸ்சை அங்கிருந்து மீட்டனர்.

காயமின்றி உயிர் தப்பினர்

இதேபோல் மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி 45 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தது. இரவில் கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூர் அருகே உள்ள ஆறாம்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக குடிபோதையில் நடந்து சென்றவர் மீது மோதாமல் இருக்க பஸ்சை திருப்பி உள்ளார்.

இதில் பஸ் நிலைதடுமாறி அருகில் இருந்த கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த 2 சம்பவங்கள் குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story