திண்டிவனத்தில் மாஜிஸ்திரேட்டு முன் பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை முயற்சி வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைதானவர்


திண்டிவனத்தில் மாஜிஸ்திரேட்டு முன் பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை முயற்சி வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைதானவர்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி மாஜிஸ்திரேட்டு முன்பு கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோஷனை காலனி பகுதியில் தனது வீட்டின் பின்புறம் சாராயம் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜூ மகன் கிடங்கிலான் என்கிற சரண்ராஜ்(வயது 34) என்பவரை ரோஷனை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சரண்ராஜை திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 மாஜிஸ்திரேட்டு முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது சரண்ராஜ் தான் மறைத்து வைத்து எடுத்து வந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

சிறையில் அடைக்க உத்தரவு

இதைபார்த்து அதிா்ச்சியடைந்த போலீசார், அவரை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை போலீசார் மீண்டும் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து சரண்ராஜை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும் மாஜிஸ்திரேட்டு முன்பு வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story