திண்டிவனத்தில் அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


திண்டிவனத்தில்  அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

திண்டிவனத்தில் அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் திருவள்ளுவர் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக விழுப்புரம் மாவட்ட திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் ரேகாமதி, ரோசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா, தலைமை காவலர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட அரிசி ஆலையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 டன் 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர் ரப்பேர்ட் பாஷா (வயது 62) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story