ஈரோடு மாவட்டத்தில் 6 மாதங்களில் 4 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம்


ஈரோடு மாவட்டத்தில் 6 மாதங்களில் 4 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம்
x

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 4 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் அதிகாரி இலாஹிஜான் தெரிவித்துள்ளார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 4 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் அதிகாரி இலாஹிஜான் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டு

ஈரோடு மாவட்டத்தில் 1,159 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 8 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண் எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. புதிதாக ரேஷன் கார்டு பெற தினமும் ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சென்னையில் இருந்து ஸ்மார்ட் கார்டு அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.

இதனால் புதிய கார்டு பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர் அனுமதி பெற்று, கார்டு பிரிண்ட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பித்த சில நாட்களிலேயே விண்ணப்பதாரர்களுக்கு கார்டு வழங்கப்பட்டு விடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4 ஆயிரம்...

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான் கூறியதாவது:-

தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் குறைதீர் கூட்டங்களில் பெறப்படும் புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பம் உடனடியாக விசாரிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு உரிய பரிந்துரையுடன் கலெக்டரிடம் அனுமதி பெற்று 15 நாட்களுக்கு ஒரு முறை ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் செய்து வழங்கப்படுகிறது. தற்போது அந்தந்த மாவட்டங்களிலேயே பிரிண்ட் செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளதால் எளிதாக புதிய ரேஷன் கார்டுகள் பெற முடிகின்றது. கடந்த மே மாதம் 703 கார்டும், ஜூன் மாதம் 700 கார்டும் பிரிண்ட் செய்து வழங்கி உள்ளோம். கடந்த 6 மாதங்களில் மட்டும் புதியதாக 4 ஆயிரம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. உரிய காரணம் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் ரேஷன் பொருட்கள் முழு அளவில் வரப்பெற்று வினியோகிக்கப்படுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருட்களை இருப்பு வைத்து வழங்கும் வகையில், தாலுகா அளவில் ஒரு இடத்தில் குடோன் அமைக்க திட்டம் உள்ளது. 2 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாலும், நிலம் இல்லாததாலும் அந்த திட்டம் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story