ஈரோடு மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 11 பேர் தேர்வு


ஈரோடு மாவட்டத்தில்  நல்லாசிரியர் விருதுக்கு 11 பேர் தேர்வு
x

நல்லாசிரியர்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 11 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

நல்லாசிரியர் விருது

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி ஆண்டு தோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு, ஈரோடு மாவட்டத்தில் 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பங்களாப்புதூர் அரசு மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ராஜு, தொட்டம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூட முதுகலை ஆசிரியர் சண்முகசுந்தரம், ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூட முதுகலை ஆசிரியை மீரா, ஈரோடு அரசு மாதிரி மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி, கள்ளிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளிக்கூட முதுகலை ஆசிரியர் அன்பரசு ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

11 பேருக்கு...

மேலும் கருங்கல்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூட இடைநிலை ஆசிரியர் லோகநாதன், மொடக்குறிச்சி சாமிநாதபுரம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சாந்தி, சத்தியமங்கலம் கானக்குந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ஜெபஸ்.

அந்தியூர் காட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மஞ்சுளாதேவி, டி.என்.பாளையம் அருகே உள்ள வினோபா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியை மோகனாம்பாள், கோபி சி.கே.குமாரசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூட முதல்வர் கவிதா ஆகிய 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story