ஈரோடு மாவட்டத்தில்புதிதாக 7 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 100 பேருக்கு பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 764 ஆக உயர்ந்தது. இதற்கிடையில் நேற்று 6 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 998 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 734 பேர் இறந்துள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 32 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story