ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு


ஈரோடு மாவட்டத்தில்  நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை  பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மேலும், தண்ணீர் வடிந்து பவானி ஆற்றில் வந்து கலந்தது. கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானியில் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. அங்கு வெள்ளியை உருக்கி கொட்டியதுபோல் தண்ணீர் வெள்ளை நிறத்தில் பெருக்கெடுத்து ஓடியது.

கோபிசெட்டிபாளையத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதற்கு அடுத்ததாக கொடிவேரியில் 72 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

சத்தியமங்கலம் - 58

குண்டேரிப்பள்ளம் - 56

எலந்தகுட்டைமேடு - 38.2

பெருந்துறை - 27

கவுந்தப்பாடி - 26.8

வரட்டுப்பள்ளம் - 11

தாளவாடி - 10.4

சென்னிமலை - 7

பவானிசாகர் - 8.2


Next Story