ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் -டிரைவர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு; நாளை மறுநாள் நடக்கிறது
ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.
மருத்துவ உதவியாளர் -டிரைவர்
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆதவன் மாதவன் கோவிலை வெள்ளம் சூழ்ந்து செல்வதை படத்தில் காணலாம். 108 ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வானது ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டி.பி. ஹாலில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது.
108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட இருபாலர்கள், பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. படித்திருக்க வேண்டும். அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்சி. ஜூவலாஜி, பாட்டனி, பயோ கெமிஸ்டிரி, மைக்ரோ பயலாஜி, பயோ டெக்னாலஜி, பிளன்ட் பயலாஜி) படித்தவர்கள் பங்கேற்கலாம்.
எழுத்து தேர்வு
எழுத்து தேர்வு, மருத்துவம் சார்ந்த மற்றும் மனித வள துறையின் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு மாதம் ரூ.14 ஆயிரத்து 966 வழங்கப்படும். இதேபோல், டிரைவர் பணியிடத்துக்கு 24 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இருபாலர்களுக்கும் வாய்ப்பு உண்டு. கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர்கள் 162.5 சென்டி மீட்டர் உயரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். டிரைவர் பணியிடத்திற்கு ரூ.14 ஆயிரத்து 766 ஊதியம் வழங்கப்படும். இந்த பணியிடத்திற்கு எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவள துறை நேர்காணல், கண்பார்வை சம்மந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்வில் பங்கேற்பவர்கள் அனைவரும் அசல் சான்றிதழ்களையும், முக கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 73977-24829, 91500-84156, 73388-94971 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.