ஈரோடு கிழக்கு தொகுதியில்32 வாக்குசாவடிகள் பதற்றமானவை


ஈரோடு கிழக்கு தொகுதியில்32 வாக்குசாவடிகள் பதற்றமானவை
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் 32 வாக்குசாவடிகள் பதற்றமானவை தோ்தல் பிாிவு அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 52 இடங்களில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இதற்காக 500 வாக்குபதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வசதி கொண்ட விவிபேடு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 238 வாக்குச்சாவடிகளில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறிப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம், கடந்த காலத்தில் வாக்குப்பதிவின் போது எழுந்த புகார், வாக்காளர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் அதாவது 15 வாக்குச்சாவடிகள் கருங்கல்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளன.

மேலும் ஈரோடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 13 வாக்குச்சாவடிகளும், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட 4 வாக்குச்சாவடிகளும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், வாக்குசாவடியில் கேமரா பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் பதிவு செய்யப்படும் என்பதோடு மத்திய அரசு ஊழியர்கள் தேர்தல் நுண் பார்வையாளராக நியமிக்கப்படுவார்கள் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story