ஈரோடு கிழக்கு தொகுதியில்இடைத்தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்


ஈரோடு கிழக்கு தொகுதியில்இடைத்தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகம் தேர்தல் அலுவலகமாக செயல்பட உள்ளது. இதனால், அங்கிருந்த இந்த தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் ஆகியவை ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலக கட்டிடத்துக்கு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலாகி உள்ளது. அதன்படி, ஈரோடு மாநகராட்சி வளாகம் உட்பட அந்த தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகள் சார்ந்த தலைவர்கள் பெயர், படங்கள் அகற்றவும், மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலக கட்டிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு, அந்த எந்திரங்கள் சரி பார்த்து, பழுதுகள் இருந்தால் நீக்கம் செய்து தயார் நிலைப்படுத்தப்படும். இந்த தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், அச்சமின்றி நடத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story