ஈரோடு கிழக்கு தொகுதியில்டிரம்ஸ் அடித்து ஓட்டு வேட்டையாடியமுன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


ஈரோடு கிழக்கு தொகுதியில்டிரம்ஸ் அடித்து ஓட்டு வேட்டையாடியமுன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
x
தினத்தந்தி 15 Feb 2023 1:00 AM IST (Updated: 15 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் டிரம்ஸ் அடித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஓட்டு வேட்டையாடினார்.

டிரம்ஸ் அடித்து...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் டிரம்ஸ் அடித்து, இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடினார். மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மனதால் வாக்காளர்களை கவர களப்பணி ஆற்றி வருகிறோம். இரட்டை இலை சின்னம் வெற்றி பெறும் என்ற மனஉறுதி கிழக்கு தொகுதி வாக்காளர்களிடம் இருக்கிறது. மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல் - அமைச்சர் ஆக வரவேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்.

ஜனநாயகத்தின் பக்கம்

மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அமைவதற்கு அச்சாரமாக இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றி இருக்கும்.

மக்கள் தேர்தலில் நியாயத்தின் பக்கம், ஜனநாயகத்தின் பக்கம் நின்று சாமானிய தொண்டரான தென்னரசுக்கு வாக்களிப்பார்கள். பட்டப்பகலில் கொலை, கொள்ளை சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. மக்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அச்சத்தை போக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story