ஈரோடு மார்க்கெட்டுகளில் மஞ்சள் விலை உயர்வு; குவிண்டால் ரூ.8,259-க்கு விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி


ஈரோடு மார்க்கெட்டுகளில்  மஞ்சள் விலை உயர்வு; குவிண்டால் ரூ.8,259-க்கு விற்பனை  விவசாயிகள் மகிழ்ச்சி
x

விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டுகளில் மஞ்சள் விலை உயர்ந்து குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 259-க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மஞ்சள் விலை உயர்வு

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைகிறது. இதனால் ஈரோடு மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. நேற்று முன்தினத்தைவிட நேற்று நடந்த ஏலத்தில் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரை விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 843 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 799 -க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 129-க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 280-க்கும், அதிகபட்சமாக ரூ.6ஆயிரத்து 839-க்கும் விற்பனை ஆனது. மொத்தம் 797 மஞ்சள் மூட்டைகள் ஏலம் போனது.

ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 2 ஆயிரத்து 19 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 729-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 259-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 369-க்கும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 802-க்கும் ஏலம் போனது. 728 மஞ்சள் மூட்டைகள் விற்பனை ஆனது.

விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்திற்கு 329 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 739-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 210-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 399-க்கும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 959-க்கும் விற்பனையானது. விவசாயிகள் கொண்டு வந்ததில் 297 மூட்டை மஞ்சள் ஏலம் போனது.

கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு 146 மஞ்சள் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு அனைத்து மூட்டைகளும் ஏலம் போனது. விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 83-க்கும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 899-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 274-க்கும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 375-க்கும் ஏலம் போனது. மஞ்சள் விலை நேற்று உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story