எட்டயபுரம் பகுதியில் மோடி பிறந்த நாள்விழா
எட்டயபுரம் பகுதியில் மோடி பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் பா.ஜ.க சார்பாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தின விழா எட்டயபுரத்தில் உள்ள 15 வார்டுகளிலும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ் முன்னிலை வகித்தார். ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் ராம்கி வரவேற்று பேசினார். எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் கட்சி ஏற்றி இனிப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஆர்.சி தெரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டது. எட்டயபுரம் நடுவிற்பட்டி பட்டத்து விநாயகர் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெசவாளர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் ஹரிஹரசுதன், காளிராஜ், ஒன்றிய செயலாளர்கள் மாடசாமி, மணிகண்டன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எட்டயபுரம் பா.ஜ.க ஒன்றிய தலைவர் சரவணகுமார் செய்திருந்தார்.