குருபெயர்ச்சியை முன்னிட்டுதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
குருபெயர்ச்சியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் குரு பெயர்ச்சி தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். பக்தர்கள் அதிகாலையில் இருந்து கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதற்காக நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடரந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள சுவாமி தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story