கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு   காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:45 PM GMT)

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் முன்னாள் மாவட்ட துணை தலைவர் அய்யலுசாமி

தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் முக்கியசாட்சியாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி அனுசுயாவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், அவருக்கு மிரட்டல் விடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story