பெருந்துறை டாஸ்மாக் கடை முன்பு மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
டாஸ்மாக் கடை முன்பு
பெருந்துறை- பவானி ரோட்டில், சினிமா தியேட்டர் அருகே அரசு டாஸ்மாக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளராக காஞ்சிக் கோவில் குருச்சான்வலசை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 47) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 26-ந் தேதி காலை தன்னுடைய மோட்டார் சைக்கிளை டாஸ்மாக் கடை முன்பு நிறுத்திவிட்டு பணிக்கு சென்றார். பகல் 1.30 மணி அளவில் அவர் வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டார்கள். இதுகுறித்து பெருந்துறை போலீசில் சுந்தர்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார்சைக்கிள் திருடியவரை தேடி வந்தார்கள். இந்தநிலையில் திருடப்பட்ட மோட்டார்சைக்கிள்
பெருந்துறை சென்னியவலசில் உள்ள ஒரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், திருட்டுப்போன மோட்டார் சைக்கிளை மீட்டதோடு, அதை திருடிச்சென்ற சுரேஷ்குமார் (41) என்பவரை கைது செய்தார்கள்.