திருக்கார்த்திகையை முன்னிட்டு பனை ஓலை விற்பனை மும்முரம்


திருக்கார்த்திகையை முன்னிட்டு  பனை ஓலை விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் திருக்கார்த்திகையை முன்னிட்டு பனை ஓலை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு பனை ஓலைகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

திருக்கார்த்திகை விழா

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் இரவில், வீடுகள்தோறும் அகல் விளக்கு தீபம் ஏற்றுவதும், கொழுக்கட்டை தயார் செய்து படைத்து வழிபடுவதும் வழக்கம் ஆகும். இந்த ஆண்டுக்கான திருக் கார்த்திகை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தீபத்துக்கான அகல்விளக்கு களை மக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். தூத்துக்குடியில் விதவிதமான அகல் விளக்குகள், விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

பனை ஓலை

அதே போன்று கொழுக்கட்டைகள் தயார் செய்வதற்காக பனை ஓலைகளும் ஏராளமாக விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பனை ஓலைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு ஓலை ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.


Next Story