கயத்தாறு பகுதியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வினியோகம்
கயத்தாறு பகுதியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வினியோகம் செய்யப்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறு வட்டாரத்தில் கயத்தாறு, கழுகுமலை, கடம்பூர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் உளுந்து, பாசிப்பயறு, பருத்தி மற்றும் கம்பு விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கயத்தாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.சுரேஷ் ளெியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உளுந்து பயிரில் வம்பன்- 8, மற்றும் மதுரை- 1 ரக விதைகளும், பாசிப்பயிரில் வம்பன்- 4 ரக விதைகளும், பருத்தியில் எம்.சி.யூ- ரகம்- 5, கம்பு பயிரில் தனசக்தி கோ 10 ரகம் மானிய விலையிலும் மற்றும் விதை நேர்த்தி மருந்துகள், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுயூட்ட உரங்கள் 5 சதவீத மானிய விலையிலும் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் அந்தந்த பகுதி வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு சென்று உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி மானிய விலையில் விதைகள் வாங்கி பயிரிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.