கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.8¾ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.8¾ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனது
ஈரோடு
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 4 ஆயிரம் வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் கதலி வாழைப்பழம் கிலோ ஒன்று ரூ.64-க்கும், நேந்திரன் வாழைப்பழம் ரூ.44-க்கும் விற்பனை ஆனது. பூவன் (தார் ஒன்று) ரூ.510-க்கும், தேன்வாழை ரூ.680-க்கும், செவ்வாழை ரூ.900-க்கும், ரஸ்தாளி ரூ.510-க்கும், மொந்தன் ரூ.580-க்கும், பச்சைநாடன் ரூ.390-க்கும், ரொபஸ்டா ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார் மொத்தம் ரூ.8 லட்சத்து 67 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
இதேபோல் 7 ஆயிரத்து 300 தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் தேங்காய் ஒன்று ரூ.7 முதல் ரூ.13.40 வரை மொத்தம் ரூ.68 ஆயிரத்து 400-க்கு விற்பனை ஆனது.
Related Tags :
Next Story