கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x

கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள நம்பியூர் சாவக்காட்டுபாளையத்தை சேர்ந்தவர் பரமேஷ்வரன். இவருடைய மகள் சுவாதி (வயது 20). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருடைய மகன் அன்பழகன் (23). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளாக சாவக்காட்டுபாளையத்தில் தங்கி இருந்து வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில் ஒரே பகுதி என்பதால் அன்பழகனுக்கும், சுவாதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதனால் ஒருவரை ஒருவர் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதற்கு 2 பேரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை வீட்டு வெளியேறிய அன்பழகனும், சுவாதியும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அதன்பின்னர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மணமகளின் பெற்றோர் இவர்களது திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்பழகனின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து காதல் தம்பதியர்களை மணமகன் வீட்டுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story