கோபியில்டயர் வெடித்து நடுரோட்டில் நின்ற அரசு பஸ்


கோபியில்டயர் வெடித்து நடுரோட்டில் நின்ற அரசு பஸ்
x
தினத்தந்தி 29 Jan 2023 1:00 AM IST (Updated: 29 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்

ஈரோடு

கோவையில் இருந்து அந்தியூர் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். கோபி கச்சேரி மேடு எம்.ஜி.ஆர். சிலை அருகே மாலை 6.45 மணி அளவில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த பஸ்சின் இடது பக்க டயர் வெடித்தது. அதனால் பஸ் நடுரோட்டிலேயே நின்று விட்டது.

இதனால் பயணிகள், டிரைவர், கண்டக்டர் என அனைவரும் பஸ்சை விட்டு கீழே இறங்கினார்கள். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்து கோபி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து பயணிகள் மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story