கோபியில்மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம்


கோபியில்மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம்
x

கோபியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டது

ஈரோடு

குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

கோபி தாலுகாவுக்குட்பட்ட 144 ரேஷன் கடைகளில் உள்ள ஊழியர்கள் மூலம் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன் நேற்று வழங்கப்பட்டன. அதில் முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை தனி தாசில்தார் கார்த்திக், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


Next Story