கோபியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோபியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு
கடத்தூர்
கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றிய தலைவர் ரத்னா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் ரஜித்குமார், சாலை பணியாளர்கள் சங்க நம்பியூர் வட்ட கிளை செயலாளர் கருப்புசாமி, மருத்துவத் துறையைச் சேர்ந்த பேபி மற்றும் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். இதில் கலந்து கொண்டவர்கள் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story