கோபியில் ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது


கோபியில்  ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 16 Oct 2022 1:00 AM IST (Updated: 16 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பாம்பு பிடிபட்டது

ஈரோடு

கோபி வண்டிபேட்டையை சேர்ந்தவர் மணி. இவர் தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரை எடுக்க முயன்றார். அப்போது உள்ளே பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே ஸ்கூட்டரில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் இதுபற்றி கோபி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று ஸ்கூட்டர் இருக்கையின் கீழே இருந்த சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர்.

அதேபோல் கோபி அருகே உள்ள சக்திநகரை சேர்ந்த மேத்யூ என்பவரது வீட்டில் சுமார் 2 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்து உள்ளது. இதை பார்த்த மேத்யூ மற்றும் குடும்பத்தினர் பாம்பை பிடிக்க முயன்றனர் அப்போது பாம்பு வீட்டின் முன் பகுதியில் இருந்த ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு இருந்த தொட்டிக்குள் புகுந்தது. இதுபற்றி அறிந்ததும் கோபி தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று ஆழ்குழாய் கிணறு தொட்டிக்குள் இருந்த பாம்பை உயிருடன் பிடித்தனர்.

பிடிபட்ட 2 பாம்புகளும் கோபி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.


Next Story