அரசு ஆஸ்பத்திரிகளில் பல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும்கலெக்டரிடம் கோரிக்கை
அரசு ஆஸ்பத்திரிகளில் பல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனஜ அளிக்கப்பட்டது
ஈரோடு
கொங்கு மண்டல தர்காக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு இடங்களில் பல் டாக்டர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். இதன் காரணமாக பள்ளிக்கூட மாணவ -மாணவிகள், முதியவர்கள் பல் வலி மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உரிய சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள பல் டாக்டர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது நிரந்தரமாகவோ பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story