தாயார் இறந்த துக்கத்திலும் கிராம உதவியாளர் தேர்வு எழுதிய பெண்


தாயார் இறந்த துக்கத்திலும்  கிராம உதவியாளர் தேர்வு எழுதிய பெண்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே தாயார் இறந்த துக்கத்திலும் பெண் ஒருவர் கிராம உதவியாளர் தேர்வு எழுதினார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே வெங்கடாசலபுரத்தில் வசிப்பவர் இருளப்பசாமி மனைவி கனகரத்தினம் (வயது 37). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருளப்பசாமி இறந்து விட்டார். இதனால் கனகரத்தினம் தன்னுடைய குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கனகரத்தினத்தின் தாயார் பசுபதி கடந்த 18-ந்தேதி கூலி வேலைக்கு சென்றபோது, அவரை பாம்பு கடித்தது. உடனே அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே கனகரத்தினம் கிராம நிர்வாக உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு எட்டயபுரம் அருகே கீழ ஈரால் டான் போஸ்கோ கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தாயார் இறந்த துக்கத்திலும் கனகரத்தினம் நேற்று கிராம நிர்வாக உதவியாளர் தேர்வு எழுதினார். பின்னர் அவர், வெங்கடாசலபுரத்துக்கு வந்து தாயாரின் இறுதிச்சடங்கில் குழந்தைகளுடன் பங்கேற்றார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story