கூடலூரில் பழங்களில் செஸ் ஒலிம்பியாட் லோகோ, சின்னங்களை வடிவமைத்து விழிப்புணர்வு


கூடலூரில்  பழங்களில் செஸ் ஒலிம்பியாட் லோகோ, சின்னங்களை வடிவமைத்து விழிப்புணர்வு
x

கூடலூரில் பழங்களில் செஸ் ஒலிம்பியாட் லோகோ, சின்னங்களை வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

தேனி

சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் பல்வேறு கட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த காய் கனி சிற்பக் கலைஞர் இளஞ்செழியன் என்பவர் தர்ப்பூசணி பழங்களில் செஸ் ஒலிம்பியாட் லோகோவை வடிவமைத்துள்ளார். இதேபோல் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் ஆகிய பழங்களில் செஸ் சின்னங்களை வடிவமைத்துள்ளார். இவை அனைத்தும் ஒரே கூடையில் வைக்கப்பட்டு மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் அரங்க வரவேற்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story