கூடலூரில்தூக்குப்போட்டு பெண் தற்கொலை
கூடலூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கூடலூர் 6-வது வார்டு பட்டாளம்மன் கோவில் ஓடை தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வனராணி (வயது 47). இந்த தம்பதிக்கு கருணாகரன், இந்திரஜித் என்ற 2 மகன்களும், தமிழ் செல்வி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் தமிழ்செல்வி குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மகளின் வாழ்க்கையை நினைத்து வனராணி, மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது வனராணி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கூடலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வனராணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.