கூடலூரில்நகராட்சி தூய்மை பணியாளர் தற்கொலை


கூடலூரில்நகராட்சி தூய்மை பணியாளர் தற்கொலை
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் நகராட்சி தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

கூடலூர் 6-வது வார்டு பட்டாளம்மன் கோவில் ஓடைத் தெருவை சேர்ந்தவர் ராஜ் கண்ணன் (வயது 38). நகராட்சி தூய்மை பணியாளர். இவர், உடல் நிலை குறைவால் அவதியடைந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த கூடலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் ராஜ்கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story