தேனியில்புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது


தேனியில்புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 13 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்கள் விற்ற கடையின் உரிமையாளர் முருகேசனை (வயது 61) கைது செய்தனர். இதேபோல், தேனி புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற உப்புக்கோட்டையை சேர்ந்த வைரவன் மனைவி பஞ்சவர்ணம் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பழனிசெட்டிபட்டியில் ஒரு தியேட்டர் முன்பு புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் முத்துராம் (38) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 9 பாக்கெட் புகையிலை பொருட்களை பழனிசெட்டிபட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். தேனி பாரஸ்ட்ரோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வைகுண்டசாமி (45) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 25 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story