தேனியில்தையல் தொழிலாளி தற்கொலை
தேனியில் தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி பாரஸ்ட்ரோடு 4-வது தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வம் (வயது 48). தையல் தொழிலாளி. இவரது மனைவி செல்வி (40). குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வி கோபித்துக் கொண்டு பாரஸ்ட்ரோடு 1-வது தெருவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பிறகு மாரிசெல்வம் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் பணியாற்றும் தையல் கடையின் உரிமையாளர் பிரபாகரன் என்பவர் மாரிசெல்வத்தை தேடி அவருடைய வீட்டுக்கு நேற்று வந்தார்.
அப்போது வீட்டுக்குள் மாரிசெல்வம் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவர் தேனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.