தேனியில் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர் சாவு


தேனியில்  பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர் சாவு
x

தேனி பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்

தேனி

தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் மூணாறு பஸ்கள் நிற்கும் இடத்தில் கடந்த 26-ந்தேதி 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 28-ந்தேதி இரவில் உயிரிழந்தார். இதுகுறித்து தேனி கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story