தேனியில்விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்
தேனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
தேனி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் தேனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் தமிழ்பாண்டியன் வரவேற்றார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாநில துணைச்செயலாளர்கள் தமிழன், கோமதி ஆனந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில், ஏப்ரல் 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாட வேண்டும். பெரியகுளத்தில் இருந்து வடுகப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் வழியாக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். சருத்துப்பட்டி ஊராட்சியில் சமுதாயக்கூடம், பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர செயலாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.