தேனியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள், முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அரசு துறை அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மேகமலை புலிகள் காப்பக மண்டல துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story