தேனியில் மாநில அளவிலான செஸ் போட்டிகள்
தேனியில் மாநில அளவிலான செஸ் போட்டிகள் நடந்தது
தேனி
தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் சுதந்திர தினத்தையொட்டி மாநில அளவிலான செஸ் போட்டிகள் தேனியில் நடந்தது. வயது வாரியாக 3 பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தன. இதில் தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, திண்டுக்கல், திருச்சி, திருப்பூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து 100 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 6 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் வழங்கினார். இதில் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, தி.மு.க. நகர செயலாளர் நாராயணபாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அகாடமி தலைவர் சையது மைதீன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story