தேனியில் தங்கும் விடுதியில் தொழிலாளி தற்கொலை
தேனியில் தங்கும் விடுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி அல்லிநகரம் மருதையன் தெருவை சேர்ந்தவர் முத்துராமையா (வயது 65). இவர் மதுரையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இவர், தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அங்கு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விடுதி அறையில் அவர் பிணமாக கிடப்பது குறித்து அவருடைய மனைவி நளினிக்கு விடுதி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தார்.
அவர் அங்கு வந்து தனது கணவரின் உடலை பார்த்துவிட்டு தேனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி கால் வலி ஏற்பட்டு வந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற்றும் குணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.