ஜீர்கள்ளி வனச்சரகத்தில் இறந்து கிடந்த பெண் யானை


ஜீர்கள்ளி வனச்சரகத்தில்   இறந்து கிடந்த பெண் யானை
x

ஜீர்கள்ளி வனச்சரகத்தில் பெண் யானை இறந்து கிடந்தது.

ஈரோடு

தாளவாடி

ஜீர்கள்ளி வனச்சரகத்தில் பெண் யானை இறந்து கிடந்தது.

யானை சாவு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அடிக்கடி வனத்தை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்ததையாகி வருகிறது. இந்த நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட அருள்வாடி கிராமத்தில் இருந்து மீன்கரை சொல்லும் சாலையில் ஓடை அருகே ஒரு யானை இறந்து கிடப்பதாக ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஜீர்கள்ளி வனச்சரகர் ராமலிங்கம் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் உடலை பார்வையிட்டார்கள்.

சண்டை நடந்ததா?

கால்நடை துறை மருத்துவர் சதாசிவம் யானையின் உடலை பிரேத பாிசோதனை செய்தார்.பிரேதபரிசோத னைக்கு பின்னர் யானையின் உடல் அங்கேயே புதைக் கப்பட்டது. இதுபற்றி அவர் கூறும்போது, 'இறந்து கிடந்தது பெண் யானை, சுமார் 40 வயது இருக்கும். தற்போது கர்நாடக வனப்பகுதியில் இருந்து அதிக அளவில் யானைகள் தாளவாடி வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. அப்போது யானைகள் ஒன்றக்கொன்று சண்டை போட்டுக்கொண்டதில் இந்த யானை இறந்ததா? என்று தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே யானை இறந்த காரணம் தெரியவரும்' என்றார்.


Next Story