கடமலைக்குண்டுவில்எலக்ட்ரீசியன் வீட்டில் தீ விபத்து
கடமலைக்குண்டுவில் எலக்ட்ரீசியன் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. எலக்ட்ரீசியன். நேற்று இவர், வீட்டை பூட்டிவிட்டு தேனிக்கு சென்று விட்டார். இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக கடமலைக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து கருகின. மின் கசிவு காரணமாக வீட்டில் இருந்த கம்ப்யூட்டரில் தீ பற்றி எரிந்தது. தொடர்ந்து அருகே இருந்த டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்களில் தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.