கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச திருவிழா; 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச திருவிழா; 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச திருவிழா 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச திருவிழா 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கழுகாசலமூர்த்தி கோவில்

தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் வருகிற 27-ந் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி அன்று அதி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து அங்குள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 7 மணியளவில் கொடியேற்றம் நடக்கிறது.

5-ந் தேதி தேரோட்டம்

முக்கிய விழாவான தேரோட்டம் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடக்கிறது. 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, வள்ளி- தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். காலை 10.30 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்று நிலையை வந்தடைகிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு ஒவ்வொரு சமுதாயம் சார்பில் மண்டகப்படி திருவிழா நடக்கிறது. தேர் திருவிழாவை காண கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story