கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி தேரோட்டம்


கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி தேரோட்டம்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

கழுகுமலை:

தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். தினமும் இரவு 8 மணியளவில் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் மண்டகபடி திருவிழா நடந்து வருகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் நாளை (செவ்வாய் கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடக்கிறது. காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. காலை 7.30 மணியளவில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். அதை தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்று நிலையை வந்தடைகிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story