கழுகாசலபுரம் கிராமத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி


கழுகாசலபுரம் கிராமத்தில்  பனை விதை நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகாசலபுரம் கிராமத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள கழுகாசலபுரம் கிராமம் கண்மாய் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம் சார்பில் நேற்று 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், பஞ்சாயத்து தலைவர் மதி செல்வி, உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ஜெயச்செல்வின் இன்பராஜ், வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ், அலுவலர் காயத்ரி, தொழில்நுட்ப மேலாளர்கள் தனபால், காளிமுத்து, அசோக், உதவி வேளாண்மை அலுவலர் சண்முக ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் பனை விதைகளை நட்டினர்.


Next Story