கல்லாமொழி பள்ளியில் நூலக வாசிப்பு தினவிழா
கல்லாமொழி பள்ளியில் நூலக வாசிப்பு தினவிழா கொண்டாடப்பட்டது.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள கல்லாமொழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூலக வாசிப்பு தினவிழா நடைபெற்றது. பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் முருகேஸ்வரி ராஜதுரை தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் சந்திரசேகர், உடன்குடி யூனியன் குழு முன்னாள் துணைத்தலைவர் க.வே.ராஜதுரை, நூலகர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை அம்மாசி வரவேற்று பேசினார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ மாணவிகள் அனைவருக்கும் தினத்தந்தி நாளிதழ் வழங்கப்பட்டு வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, வாசிப்பு திறன் அதிகரிக்க வேண்டும் என்றும், தினமும் ஒரு மணி நேரம் பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களை அரசு நூலகத்திற்கு சென்று வாசிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. உதவி தலைமையாசிரியை ராணி, இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர் பொன்வள்ளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.